புதுச்சேரியில் நவம்பர் 2,3 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
புதுச்சேரியில் நவம்பர் 2,3 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, அங்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நவம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை தொடர்ந்து நவம்பர் 5 ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story