ஓட்டப்பிடாரம் அருகே பெண் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
ஓட்டப்பிடாரம் அருகே பெண் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பச்சைக்கிளி மனைவி முத்துலெட்சுமி (வயது 40). இவருக்கும், ஆவாரங்காடு நடுத்தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமர் (50) என்பவருக்கும் இடையே பொதுப்பாதை சம்மந்தமாக பிரச்சினை இருந்து வந்தது. இப்பிரச்சினையில் முத்துலெட்சுமியை ராமர் கடந்த 12-ம்தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குபதிவு செய்து ராமரை கைது செய்தனர். தற்போது ராமர் பேரூரணி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து ராமரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், பேரூரணி சிறையிலுள்ள ராமரிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story