தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ1¾ கோடி கடனுதவி


தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில்  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ1¾ கோடி கடனுதவி
x
தினத்தந்தி 29 Oct 2021 6:26 PM IST (Updated: 29 Oct 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ1¾ கோடி கடனுதவி வழங்கப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1¾ கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
ரூ.1¾ கோடி கடனுதவி
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை அலுவலக பயிற்சி மையத்தில் கடலோர திட்ட கிராம சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு தொழில் திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மற்றும் அறக்கட்டளை இயக்குனர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர் மற்றும் மண்டல அலுவலர் ரகுவரன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ்சய் நாராயணன் கலந்து கொண்டு, 53 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 70 ஆயிரம் கடனுதவியை வழங்கி பேசினார்.
அப்போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் உலக அளவில் சிறப்பு வாய்ந்தது. இதில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இதனை மக்களோடு இணைந்து பாதுக்க வேண்டும். மீனவர்களின் மாற்றுத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.
அரிய உயிரினங்கள்
விழாவில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறும் போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்த அரிய உயிரினங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். இதனை யாரேனும் கடத்துவது குறித்த தகவல் கிடைத்தால், உடனடியாக தூத்துக்குடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
பயிற்சி
மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு மாற்றாக வேறு தொழிலையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க நடடிக்கை எடுக்கப்படும். திருச்செந்தர் கோவில் அருகே சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் அமைக்க மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மாற்று தொழிலை சிறப்பாக செய்து பெரிய அளவில் கொண்டு வர வேண்டும். குழந்தைகளை நன்கு படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும். படிப்புக்க தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்ச்சியில் துணை மண்டல அலுவலர்கள் மதனகுமார், ராஜ்குமார், அருண்குமார் மற்றும் திட்ட களப்பணியாளர்கள் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story