பட்டாசு கடைகளில் கிருமிநாசினி வைக்கக்கூடாது
பட்டாசு கடைகளில் கிருமிநாசினி வைக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.
ஊட்டி
பட்டாசு கடைகளில் கிருமிநாசினி வைக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.
பட்டாசு கடைகள்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பட்டாசு கடைகள் வைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊட்டியில் 5 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தீயணைப்பு கருவிகள்
இது தவிர கூட்டுறவுத்துறை, ஆயுதப்படை, போக்குவரத்து கழகம் மூலம் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டாசு கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை வைக்க உள்ள அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடந்த 26-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பட்டாசு கடையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக அதனை எதிர்கொள்ளும் வகையில் மணல், நீர் மற்றும் தீயணைப்பு கருவி ஆகிய உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.
புகை பிடிக்கக்கூடாது
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினி வைத்திருக்கக் கூடாது. அது விரைவில் தீ பிடிக்கும் தன்மை உள்ளது. பட்டாசு கடை மற்றும் கடையின் அருகே பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் போன்ற எளிதில் தீ பிடிக்க கூடியவற்றை வைத்திருக்கக் கூடாது.
பட்டாசு கடையின் அருகே மின் கசிவு ஏற்படும் வகையில் எந்த சாதனமும் இருக்கக்கூடாது. கடைக்கு பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடைக்குள் அல்லது கடையின் அருகில் புகை பிடிக்கக்கூடாது. இதனை பின்பற்றி வருகிற தீபாவளி பண்டிகையை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நல்ல முறையில் கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story