சப்-கலெக்டர் மோனிகா ஆய்வு
சப்-கலெக்டர் மோனிகா ஆய்வு
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. பலத்த மழையின்போது ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மாவட்டம் முழுவதும் 283 அபாயகரமான இடங்களில் 42 மண்டல குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி சிறப்பு தளவாடங்கள், கருவிகள் தயார் நிலையில் உள்ளதா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மரம் அறுக்கும் எந்திரங்கள், கயிறுகள், உயிர் பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் பேரிடர் மீட்பு அழைப்புகள் வருகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story