இருசக்கர வாகனத்தில் இருந்த அரசு ஆவணங்கள் திருட்டு
இருசக்கர வாகனத்தில் இருந்த அரசு ஆவணங்கள் திருட்டு
ஊட்டி
ஊட்டி நகர கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் அபு. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டி கிரீன்பீல்டு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த அலுவலக சம்பந்தப்பட்ட ஆவணங்கள் திருடு போனது தெரியவந்தது.
உடனடியாக அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து அரசு ஆவணங்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அதில் விண்ணப்பங்கள், ஆவணங்கள், காசோலைகள் இருந்து உள்ளது. இதுகுறித்து அபு ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story