முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்


முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2021 8:54 PM IST (Updated: 29 Oct 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

தேனி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் அந்த சங்கத்தினர் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம், தேனி தபால் நிலையம் முன்பு நேற்று நடந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்ட தலைவர் பாண்டியராஜ் முன்னிலையில், முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் நிர்வாகிகள் கடிதங்களை அனுப்பினர். இதில் தேனி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story