காரைக்குடியில் விடிய விடிய சாரல் மழை
காரைக்குடியில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
விடிய, விடிய சாரல் மழை
தமிழகத்தில் கடந்த 26-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்ய தொடங்கிய இந்த மழை நேற்று காலை வரையிலும் நீடித்தது.
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம இரவு முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை 9 மணி வரை பெய்ததால் காலையில் வேலைக்கு சென்றவர்களும், பள்ளிக்கு சென்றவர்களும் மழையில் நனைந்தப்படியே சென்றனர்.
நடை பாதை வியாபாரிகள் பாதிப்பு
இதற்கிடையே தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி செக்காலை சாலையின் இருபுறத்திலும் ஏராளமான வியாபாரிகள் சாலையோரம் தற்காலிகமாக கடை விரித்து உள்ளனர். நேற்று காலை 9 மணி வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் வியாபாரிகள் கடையை திறக்க முடியாமல் அவதிப்பட்டனர். தார்ப்பாயில் மழைநீர் தேங்கி நின்றதால் அதை வடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மழை நின்ற பிறகு வியாபாரத்தை கவனித்தனர். அவ்வப்போது தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சாலையோரம் வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்க முடியாமல் சிரமம் அடைந்தனர். மழையின் காரணமாக ஆட்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.
நேற்று காலை 6 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை 1.40, இளையான்குடி 1, திருப்புவனம் 2.20, தேவகோட்டை 13.20, காரைக்குடி 9.10, திருப்பத்தூர் 7.50, காளையார்கோவில் 4.20, சிங்கம்புணரி 6, இதில் அதிகபட்சமாக தேவகோட்டையில் 13.20 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக இளையான்குடியில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story