விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வடமதுரை அருகே விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூரை சேர்ந்தவர் சந்தனம் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக இளைப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சந்தனம் பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தனம் நேற்று விஷம் குடித்து வீட்டுக்கு அருகே உள்ள பகுதியில் மயங்கிக் கிடந்தார்.
உடனே அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தனம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story