நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா 2 பேர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2021 9:56 PM IST (Updated: 29 Oct 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
46 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 52,112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 4 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலில் இருந்து பிற மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,108 ஆக ஆனது.
இந்த நிலையில் நேற்று மேலும் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,154 ஆக உயர்ந்தது. 48 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
2 பேர் பலி
இதனிடையே நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 496 பேர் பலியாகி உள்ள நிலையில், நேற்று இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது. 51,149 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ள நிலையில் 507 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story