குடும்பத்தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடும்பத்தகராறு
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பாரியூர் அம்மன் நகரை சேர்ந்தவர் அப்துல் சமது (வயது 40), கூலித் தொழிலாளி.. இவரது மனைவி வீரலட்சுமி (33). அதே பகுதியில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
வேலைக்குச் செல்வதற்காக வீரலட்சுமி ஸ்கூட்டர் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரலட்சுமியின் ஸ்கூட்டரை அவருக்குத் தெரியாமல் அடமானம் வைத்து அப்துல் சமது கடன் வாங்கியுள்ளார். இது வீர லட்சுமிக்கு தெரிந்து கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளி தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது சம்பந்தமாக மீண்டும் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அப்துல் சமது அவரப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பானம் வாங்கி அதில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story