நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 29 Oct 2021 11:22 PM IST (Updated: 29 Oct 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.51 ஆயிரத்து 700-ஐ பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:
நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு  போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.51 ஆயிரத்து 700-ஐ பறிமுதல் செய்தனர்.
ரூ.51 ஆயிரத்து 700 பறிமுதல்
நாகை பால்பண்ணைச்சேரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நாகை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா ஆகியோர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது அங்கு கணக்கில் வராத ரூ.51 ஆயிரத்து 700 இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 
விசாரணை
மேலும் அலுவலக உதவியாளர் மூர்த்தி என்பவரது வங்கி கணக்கில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணனின் நண்பர் வங்கி கணக்கிற்கு ரூ.30 ஆயிரம் செலுத்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story