தொடர் மழையால் முட்டைகோஸ் விலை சரிவு


தொடர் மழையால் முட்டைகோஸ் விலை  சரிவு
x
தினத்தந்தி 29 Oct 2021 11:28 PM IST (Updated: 29 Oct 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு கொண்டு வரப்படும் முட்டைகோசின் விலை அடியோடு சரிந்துள்ளது. இதனால் திருப்பூரில் முட்டைகோஸ் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர்
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு கொண்டு வரப்படும் முட்டைகோசின் விலை அடியோடு சரிந்துள்ளது. இதனால் திருப்பூரில் முட்டைகோஸ் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்மழை
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முட்டைகோஸ் அதிக அளவில் கொண்டுவரப்படுகிறது.
தற்போது முட்டைகோஸ் அதிக அளவில் விளைந்துள்ளதால் அதன் வரத்து அதிகரித்துள்ளது. சராசரியாக தினமும் 10 லாரி முட்டைகோஸ் திருப்பூருக்கு வருகிறது. இருந்தாலும், தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் முட்டைகோஸ் விரைவில் அழுகி விடுகிறது. இதன்காரணமாக முட்டைகோசின் விலை சரிய தொடங்கியுள்ளது.
கிலோ ரூ.10-க்கு விற்பனை
நல்ல நிலையில் உள்ள 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைகோஸ் மொத்த விலையாக ரூ.400 முதல் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோவிற்கு ரூ.10 மட்டுமே வியாபாரிகளுக்கு கிடைக்கிறது. அதேநேரம் மழையால் சேதம் அடைந்த முட்டைகோஸ் மூட்டை ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது ஓட்டல், பேக்கரிகளுக்கு அதிக அளவில் முட்டைகோஸ் வாங்கி செல்கின்றனர். ஆனாலும் விலை மிகவும் குறைவாக கிடைப்பதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.

Next Story