வாலிபர் மீது 2-வது முறையாக போக்சோ சட்டம் பாய்ந்தது
சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தியதாக வாலிபர் மீது 2-வது முறையாக போக்சோ சட்டம் பாய்ந்தது.
திருத்துறைப்பூண்டி:
சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தியதாக வாலிபர் மீது 2-வது முறையாக போக்சோ சட்டம் பாய்ந்தது.
ஆசைவார்த்தை கூறி கடத்தல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் மகேஷ் கண்ணன். இவரது மகன் விக்னேஷ் கண்ணன் (வயது23). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 5.2.2021 அன்று இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் விக்னேஷ் கண்ணன் கடந்த 28-6-2021 அன்று அதே சிறுமியிடம் மீண்டும் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.
2-வது முறையாக போக்சோ சட்டம் பாய்ந்்தது
இதுகுறித்து சிறுமியின் தாய் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீசார் விக்னேஷ் கண்ணனை தேடிவந்தனர். இந்தநிலையில் கடந்த 28.10.2021 அன்று இரவு ராயநல்லூர் பகுதியில் விக்னேஷ் கண்ணன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதுங்கி இருந்த விக்னேஷ் கண்ணனை பிடித்தனர். இதையடுத்து போலீசார் 2-வது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தியதாக வாலிபர் மீது 2-வது முறையாக போக்சோ சட்டம் பாய்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story