அனைத்து பள்ளிகளும் அரசு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு


அனைத்து பள்ளிகளும் அரசு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
x
தினத்தந்தி 29 Oct 2021 11:45 PM IST (Updated: 29 Oct 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் அரசு வழிகாட்டுதலை பின்பற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் அரசு வழிகாட்டுதலை பின்பற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,  வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

பின்பற்ற வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 194 தனியார் பள்ளிகள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1,30,430 மாணவர்கள் படிக்கின்றார்கள். பள்ளிகளின் கட்டிடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என உறுதிசெய்துகொள்ள வேண்டும். 

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தரமாகவும் வழங்கப்பட வேண்டும். உணவுகளை சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் சாப்பிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். பள்ளி வளாக நுழைவு வாயிலிலேயே கிருமிநாசினி கொண்டு மாணவர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பிறகு வகுப்பிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

கொரோனா தடுப்பூசி 

ஆசிரியர்கள் மற்ற பணியாளர்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் முனிமாதன், உதவி திட்ட அலுவலர் ரூபேஷ்குமார், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story