தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சேதமடைந்த குடிநீர் தொட்டி
குஜிலியம்பாறை தாலுகா பூஞ்சோலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் தொட்டியில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை. இதன் காரணமாக எங்கள் பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபாலகிருஷ்ணன், குஜிலியம்பாறை.
குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
திண்டுக்கல் அங்குநகர் பின்புறம் மூவேந்தர்நகரில் உள்ள காலியிடத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவின்குமார், மூவேந்தர்நகர்.
துணை சுகாதார நிலையம் வேண்டும்
ஆண்டிப்பட்டி தாலுகா டி.பொம்மிநாயக்கன்பட்டியை அடுத்து டி.மல்லையாபுரம், சின்னமல்லையாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணிகள் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று பக்கத்து ஊரில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே டி.மல்லையாபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலெக்சாண்டர், டி.பொம்மிநாயக்கன்பட்டி.
மயானம் அமைக்க வேண்டும்
ஆண்டிப்பட்டி தாலுகா ராஜதானி ஊராட்சி கீழ்மஞ்சிநாயக்கன்பட்டியில் மயான வசதி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை சாலையோரத்தில் புதைக்கும் அவல நிலை உள்ளது. எனவே மயான வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திலீப்குமார், கீழ்மஞ்சிநாயக்கன்பட்டி.
சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
பழனியை அடுத்த அமரபூண்டி பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியா, அமரபூண்டி.
Related Tags :
Next Story