ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2021 1:28 AM IST (Updated: 30 Oct 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம்:
கூட்டப்புளி அருகில் ஒரு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் அந்த மினி லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். இதில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்ததும், கேரளாவுக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த நெல்சன் மகன் ஜோஸ் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

Next Story