41 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
அறந்தாங்கி அருகே 41 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அறந்தாங்கி
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனையும் மீறி ஒரு சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடு்த்து வருகிறார்கள்.இந்தநிலையில் அறந்தாங்கியை அடுத்த எஸ்.பி. பட்டணத்தை சேர்ந்த செய்யது இபுராகிரம்(வயது 38) என்பவர் நேற்று அறந்தாங்கி பஸ் நிலைய பகுதியில் இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்தார்.
41 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில், 41 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் செய்யது இபுராகிமை கைது செய்தனர்.
Related Tags :
Next Story