சங்கிலி பறிப்பு
திசையன்விளை அருகே முதியவரிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த செல்வ மருதூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 59). இவர் நேற்று திசையன்விளை புறவழி சாலையில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் பொன்னுசாமி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அவர் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.
Related Tags :
Next Story