புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பரவலாக நேற்று அதிகாலை வரை பெய்தது.
இதேபோல ஆங்காங்கே மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கல்லணை கால்வாய் கோட்டத்தில் 170 குளங்களில் 41 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி வழிகிறது. 90 முதல் 99 சதவீதம் வரை 35 குளங்கள் நிரம்பியது. மற்ற குளங்களும் நிரம்பி வருகிறது.
Related Tags :
Next Story