சாதாரண கட்டணத்தில் பயணிகள் ெரயில் இயக்கப்படுமா?


சாதாரண கட்டணத்தில் பயணிகள் ெரயில் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 30 Oct 2021 1:57 AM IST (Updated: 30 Oct 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

சாதாரண கட்டணத்தில் பயணிகள் ெரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர், 
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக ெரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பாதிப்பு படிப்படியாக குறைந்துவந்த நிலையில் மத்திய,மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்துக்கு படிப்படியாக அனுமதி அளித்து வந்த நிலையில் தற்போது முற்றிலுமாக சாலை போக்குவரத்திற்கு அனைத்து மாநில அரசுகளும் அனுமதி வழங்கியுள்ளது.
அதிக கட்டணம் 
 தமிழக அரசும் கேரள மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் ெரயில்வே நிர்வாகம் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில்களை முழுமையாக இயக்க இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே படிப்படியாக எகஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டாலும் அவற்றை சிறப்பு ெரயில்கள் என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் இயக்கி வருகிறது.
 அதனால் சாமானிய மக்கள் ெரயிலில் பயணம் செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பயணிகள் ெரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்த வழித்தடங்களிலும் எக்ஸ்பிரஸ் ெரயில்களாக இயக்கி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
பொது போக்குவரத்து 
அதிலும் குறிப்பாக மதுரை-செங்கோட்டை இடையே தினசரி 3 முறை பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு முறை மட்டுமே கூடுதல் கட்டணத்தில் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது. ெரயில் சேவை என்பது லாப நோக்கம் இல்லாமல் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசால் இயக்கப்படுவதாகும்.
 ஆனால் தற்போது சாதாரண கட்டணத்தில் பயணிகள் ெரயில்களை இயக்கப்படுவதில்ைல. இயக்கப்படும் அனைத்து ெரயில்களும் கூடுதல் கட்டணத்தில் சிறப்பு ெரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது. 
எனவே அனைத்து மாநிலங்களிலும் அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் பொது போக்குவரத்து முற்றிலுமாக அனுமதிக்கப்பட்டு விட்ட நிலையில் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பயணிகள் ெரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
கோரிக்கை 
அதிலும் குறிப்பாக மதுரை- செங்கோட்டை இடையே தினசரி 3 முறை பயணிகள் ெரயிலை இயக்கவும், திருச்செந்தூர் பாலக்காடு பயணிகள் ெரயில், விருதுநகர்-காரைக்குடி பயணிகள் ெரயில் உள்ளிட்ட பயணிகள் ெரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் கூடுதல் கட்டணத்தில் சிறப்பு ெரயில்களை இயக்கும் முறையை கைவிட்டு பொதுமக்கள் நலன் கருதி சாதாரண கட்டணத்தில் பயணிகள் ெரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதாரண கட்டணத்தில் பயணிகள் ெரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story