ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்
ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
மேம்பாலம் அமைக்கும் பணி
ராஜபாளையம் சத்திரப்பட்டி - வெம்பக்கோட்டை ெரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. பணிகள் தொடர்ந்து நடைபெற மரங்கள் அகற்றப்பட வேண்டுமென ஒப்பந்ததாரர் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சித்துறை அதிகாரிகளுடன் மேம்பாலம் நடைபெறும் பணி குறித்தும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அகற்றப்படுவது குறித்தும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டாட்சியர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.
மதிப்பீடு தயார்
அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வனத்துறை அதிகாரிகளிடம் மரத்தை எடுப்பதற்கு மதிப்பீடு தயார் செய்து விரைந்து கோட்டாட்சியரிடம் கோப்புகளை அனுப்ப வேண்டும் என கூறினார். மரங்களை வெட்ட அனுமதி வந்தவுடன் மேம்பாலப்பணி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேம்பாலம் அமைக்கும் பணியை வரும் மார்ச் மாதத்திற்குள் முடித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நலன்கருதி கணபதியாபுரம் சாலையை உடனடியாக போட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பொன்முரளி, முத்துமுனிகுமாரி, ராமகிருஷ்ணன், வனத்துறை அதிகாரி குருசாமி, நகராட்சி நில அளவையர் பாலமுருகன், நகரமைப்பு அலுவலர் மதியழகன், தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story