ஊரக வளர்ச்சி பணியாளர்கள் தபால் அனுப்பும் போராட்டம்


ஊரக வளர்ச்சி பணியாளர்கள் தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2021 2:18 AM IST (Updated: 30 Oct 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கையை அரசு கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு முதல் கட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2-வது கட்டமாக முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் தலைமை தபால் அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமையில் விருதுநகர் மாவட்ட பொருளாளர் அருணாச்சலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் போது மாவட்ட செயலாளர் கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைரமுத்து வரவேற்றார். ஒன்றியதலைவர் ஜீவராஜ் நன்றி கூறினார். இந்த இயக்கத்தின் போது 2,854 தபால்கள் முதல்-அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. 


Next Story