புகாா்பெட்டி
புகாா்பெட்டி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள நாகேஸ்வரன் கோவில் சூரிய குளத்தில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி கலக்கிறது. இதனால் குளம் முழுவதும் கழிவுநீர் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பகோணம் 19-வது வார்டு துக்காம்பாளைய தெரு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பண்டக சாலையின் எதிரே உள்ள உடையார் சந்து பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொள்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குளம் போல் தேங்கி கிடக்கம் மழைநீரை கடந்து வீடுகளுக்குள் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீரில் அடித்து வரப்படும் விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு பகுதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசி்த்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் அந்த பகுதியில் உள்ள மண் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், சாலையில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரதி நகர் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை பாலோபநந்தவனம் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பாலோபநந்தவனம் பகுதி சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Related Tags :
Next Story