அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அலுவலகத்தின் கதவுகளையும் மூடி அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே விடாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற பணிகள் அலுவலகத்திற்கு வந்தவர்கள் விவரம் மற்றும் கணக்கில் வராத பணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த பெண்கள் இயற்கை உபாதை கழிக்க செல்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதித்தனர். இதனால் பெண் அலுவலர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றநிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story