சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 30 Oct 2021 2:25 AM IST (Updated: 30 Oct 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனுக்கும், 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் சிறுவன் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story