காவலாளியை தாக்கிய டிரைவர் மீது வழக்கு


காவலாளியை தாக்கிய டிரைவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Oct 2021 2:25 AM IST (Updated: 30 Oct 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

காவலாளியை தாக்கிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கோனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன்(வயது 32). இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெரிய திருக்கோணத்தில் உள்ள ஒரு சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று குவாரிக்கு சுண்ணாம்புக்கல் ஏற்ற வரும் லாரிகளை ஒழுங்குபடுத்தி, வரிசையாக அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர் வி.கைகாட்டி அருகே உள்ள வெளிபிரிங்கியம் பகுதியை சேர்ந்த ஆனந்தன்(35) லாரியை தாறுமாறாகவும், வேகமாகவும் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனந்தனிடம் நாகராஜன் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் ஆனந்தன் நாகராஜனை தாக்கியுள்ளார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story