குடியிருப்பு பகுதியில் பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகள்


குடியிருப்பு பகுதியில் பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகள்
x
தினத்தந்தி 30 Oct 2021 2:25 AM IST (Updated: 30 Oct 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் பாம்புகள் பின்னிப்பிணைந்து விளையாடின.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இந்திரா நகர் குடியிருப்பு பகுதி சுற்றிலும் வீடுகள் உள்ள பகுதி என்பதால் அப்பகுதி சிறுவர்கள் தெருக்கள் மற்றும் காலியாக உள்ள மனைப்பகுதிகளில் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள மனைப்பகுதி ஒன்றில் சுமார் 7 அடி நீளமுள்ள 2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து விளையாடின. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாம்புகள் பின்னிப்பிணைந்து சுமார் 2 அடி உயரம் வரை எழுந்து விளையாடின. இதனை அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Next Story