முழு அரசு மரியாதையுடன் நாளை புனித் ராஜ்குமார் உடல் அடக்கம்


முழு அரசு மரியாதையுடன் நாளை புனித் ராஜ்குமார் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2021 2:27 AM IST (Updated: 30 Oct 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

புனித்ராஜ்குமார் உடலை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:

தடியடி நடத்தினர்

  நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இரவு 7 மணி வரை சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம.டி.பி.நாகராஜ், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

  அதைத்தொடர்ந்து அந்த மைதானம் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

முழு அரசு மரியாதை

  புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பெங்களூருவில் கன்டீரவா ஸ்டூடியோவில் இறுதிச்சடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது தந்தை ராஜ்குமாரின் சமாதிக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி கன்னட நடிகர்கள் யஷ், துனியா விஜய் உள்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

Next Story