கோவில் திருவிழா சமாதான கூட்டம்; தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு


கோவில் திருவிழா சமாதான கூட்டம்; தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Oct 2021 2:48 AM IST (Updated: 30 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழா சமாதான கூட்டத்துக்காக தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூர்:
புளியங்குடி அருகே தலைவன்கோட்டையில் கோவில் விழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆதி நாராயணன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பைச் சேர்ந்த தலா 5 பிரதிநிதிகளை வரவழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்தில் கோவில் விழாவை ஒற்றுமையுடன் கிராம மக்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story