தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Oct 2021 2:54 AM IST (Updated: 30 Oct 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

பள்ளம் சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் ஸ்டேட் வங்கி காலனியில் இருந்து டெரிக் சந்திப்பு செல்லும் சாலையில் மழையால் பள்ளம் ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளம் சீரமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
விபத்து அபாயம்
நாகர்கோவில் கட்டபொம்மன் சாலையில் இருந்து நாகராஜா கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் திருப்பத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக வந்து திரும்பும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடியாமல் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                        -ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் இருந்து பெரியவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -இளங்கோ பாண்டியன், மேலராமன்புதூர். 
அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
சீருடை அணிந்து அரசு பஸ்சில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசு அறிவித்தது. ஆனால், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பள்ளி மாணவிகளிடம் சில பஸ்களில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே, இதை தடுக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                               
 -ரபீக், நாகர்கோவில்.


Next Story