மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2021 4:18 AM IST (Updated: 30 Oct 2021 4:18 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்ப அதிகரித்தோ, குறைந்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை கால்வாய் பாசன பகுதிகளில் தீவிரமடைந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்வாய் பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததால் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 300 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 564 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Next Story