தபால் நிலையங்களில் பண்டிகை கால சிறப்பு பார்சல் சேவை அறிமுகம்


தபால் நிலையங்களில் பண்டிகை கால சிறப்பு பார்சல் சேவை அறிமுகம்
x
தினத்தந்தி 30 Oct 2021 8:22 AM IST (Updated: 30 Oct 2021 8:22 AM IST)
t-max-icont-min-icon

தியாகராயநகர், மயிலாப்பூர் தலைமை தபால் நிலையங்களில் பண்டிகை கால சிறப்பு பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தின் தியாகராயநகர், மயிலாப்பூரில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு பார்சல் பேக்கிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்ப விரும்பும் பரிசுப் பொருட்களை துரிதமாக அனுப்பி பயன்பெறலாம். இதற்காக வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பும் பொருட்களை மட்டும் கொண்டு வந்து எங்களிடம் உள்ள பேக்கிங் வசதியை பயன்படுத்தி கொண்டு அனுப்பலாம். பார்சலின் எடைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக பிரத்யேகமான பிரிவு இந்த தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக பார்சல் நிலை மற்றும் பட்டுவாடா செய்யப்பட்ட நிலை ஆகியவை தெரிவிக்கப்படும். இணையதளம் மூலம் பட்டுவாடா நிலையை கண்காணிக்கும் வசதியும் உண்டு. இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story