மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி
வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென சாலை வளைவில் ஒரகடம் நோக்கி திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாவாட்டின் புத்தூர் வில்லிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி (வயது 27). நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் செந்தாட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (25). ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை புதுப்பட்டினம் சோலைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (25). இவர்கள் 3 பேரும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அருகே படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென சாலை வளைவில் ஒரகடம் நோக்கி திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் நேதாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போலீசார் அசோக்கை மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், சுதாகரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story