திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு கருத்தரங்கம்


திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:49 AM IST (Updated: 30 Oct 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு கருத்தரங்கம் வருகிற 10-ந்தேதி காலை 10.30 மணி அளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு கருத்தரங்கம் வருகிற 10-ந்தேதி காலை 10.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story