மண்ணை திருடி சாலை அமைத்த விவகாரம்: நில உரிமையாளர் யார்? என்பது குறித்த அறிக்கை போலீசாருக்கு கிடைக்க நடவடிக்கை


மண்ணை திருடி சாலை அமைத்த விவகாரம்: நில உரிமையாளர் யார்? என்பது குறித்த அறிக்கை போலீசாருக்கு கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2021 12:03 PM IST (Updated: 30 Oct 2021 12:03 PM IST)
t-max-icont-min-icon

கோணசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் மண் திருடி சாலை அமைத்த விவகாரத்தில் அந்த நிலத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்த தாசில்தார் அறிக்கை போலீஸ் துறைக்கு விரைவில் கிடைக்க ஆவன செய்யப்படும் என்று ஆர்.டி.ஓ. சத்யா தெரிவித்தார்.

மண்ணை திருடி சாலை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் ஆண் துணையற்ற ஏழை மூதாட்டி சியாமளம்மாள் தனது நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவி தங்கம்மாள் என்பவரின் கணவர் கோவிந்தசாமி ரூ.3 லட்சம் மதிப்புள்ள மண்ணை திருடி தனது நிலத்திலேயே சாலை அமைத்ததாக திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவிடம் மனு அளித்தார்.

உரிமையாளர் யார்?

அந்த மனுவில் தான் இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கிடைத்த தகவலில் பொதட்டூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மண் எடுத்த இடத்தின் உரிமையாளர் யார் என்ற விவரத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க கேட்டு பள்ளிப்பட்டு தாசில்தாருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் அங்கிருந்து பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு எந்த வித பதிலும் நேற்று வரை கிடைக்காததால் எந்தவித நடவடிக்கையும் போலீஸ்துறை சார்பில் எடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவை தொடர்புகொண்டு கேட்ட போது மண் இருந்த இடம் சாலை அமைத்த இடத்தின் உரிமையாளர் யார் என்று நில அளவை செய்து உடனடியாக பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டருக்கு பள்ளிப்பட்டு தாசில்தார் அறிக்கை அனுப்ப ஆவன செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story