லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு


லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Oct 2021 7:44 PM IST (Updated: 30 Oct 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மீட்பு உபகரணங்கள் கொண்டு வந்த லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்

கூடலூரில் மீட்பு உபகரணங்கள் கொண்டு வந்த லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.  பேரிடர் ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அதன்படி கூடலூர் தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு பணிக்கான உபகரணங்கள் நேற்று காலை 11.30 மணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை நீலகிரி மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி சுகந்தி பரிமளா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூடலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பழுதான லாரி

முன்னதாக தீயணைப்பு, மின்வாரியம் உள்பட ஒவ்வொரு துறையினரும் தங்களது உபகரணங்களை லாரிகளில் ஏற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். ஆய்வுக்கு பிறகு உபகரணங்களை மீண்டும் லாரிகளில் ஏற்றி அந்தந்த அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல புறப்பட்டனர்.

அப்போது மின்வாரிய துறையினரின் லாரி திடீரென பழுதடைந்தது. பின்னர் தள்ளிவிட்டு லாரி இயக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது காண்போரை நகைப்புக்குள்ளாக்கியது.


Next Story