இந்திய கம்யூனிஸ்டு நூதன போராட்டம்
இந்திய கம்யூனிஸ்டு நூதன போராட்டம்
ஊட்டி
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை வாரந்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அதன் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி இருசக்கர வாகனங்களை கையால் தள்ளிக்கொண்டு சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜீவ்காந்தி ரவுண்டானா வரை சென்று மீண்டும் பஸ் நிலையம் முன்பு வரை வந்தனர்.
Related Tags :
Next Story