திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில்பாதை பணிகள்
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில்பாதை பணிகளை டிராலியில் சென்று தலைமை ரெயில்வே நிர்வாக அதிகாரி புரபுல்லாவர்மா ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில்பாதை பணிகளை டிராலியில் சென்று தலைமை ரெயில்வே நிர்வாக அதிகாரி புரபுல்லாவர்மா ஆய்வு செய்தார்.
அகல ரெயில்பாதை பணிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளிக்கு கடந்த 140 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையில் ரெயில் இயங்கி வந்தது. இந்த மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர்-காரைக்குடி மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டு பணிகள் தொடங்கியது. அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளி செல்லும் ெரயில் பாதை பிரிக்கப்பட்டது.
டிராலி மூலம் ஆய்வு
இந்த நிலையில் திருவாரூர்-காரைக்குடி அகல பாதையில் ரெயில் இயங்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.126 கோடியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளி வரை அகல ரெயில் பாதை பணிகளும், திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்குவளை, வேளாங்கண்ணி செல்லும் அகல ரெயில்பாதை பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சென்னை தலைமை ெரயில்வே நிர்வாக அதிகாரி புரபுல்லாவர்மா, தலைமை என்ஜினீயர் காட்டே ஆகியோர் நேற்று டிராலி மூலம் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளி செல்லும் அகல ரெயில் பாதை பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
விைரவில் ரெயில்கள் இயக்கப்படும்
பின்னர் தலைமை ரெயில்வே நிர்வாக அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியம்பள்ளி வரை அகல ரெயில் பாதை பணிகளும், திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்குவளை, வேளாங்கண்ணி செல்லும் அகல ரெயில்பாதை பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு ெரயில்கள் இயக்கப்படும். திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் இன்னும் ஒரு சில மாதங்களில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு ெரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story