தர்மபுரி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ 44 ஆயிரம் சிக்கியது
தர்மபுரி தீயணைப்பு அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ44 ஆயிரம் சிக்கியது.
தர்மபுரி:
தர்மபுரி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.44 ஆயிரம் சிக்கியது.
லஞ்ச வசூல் புகார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் நேரடியாக சென்று பயன்பெறும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி லஞ்ச பண பரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல் அரசு அலுவலர்கள் தீபாவளி பண்டிகைக்கு லஞ்சம் பெறுவது தொடர்பாக கிடைக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பணம் சிக்கியது
இந்த நிலையில் தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.43 ஆயிரத்து 950 சிக்கியது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாரிடமிருந்து? யாருக்கு வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சமாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து துறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story