அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. நேற்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. நேற்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்்த மழையால் பல இடங்களில் மழை நீர் வயல்களில் தேங்கி நின்றதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து  உள்ளது. இதில் நெல் மணிகள் உதிர்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் கிடக்கிறது. பல இடங்களில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மழையில் நனைந்த  நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு 2-வதுநாளாக விடுமுறை 
எனவே அரசு மழை காலத்தினை கருத்தில் கொண்டு நெல் ஈரப்பதம் அளவினை அதிகரித்து கொள்முதல் செய்திட வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் பெற்று தர வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டது.
மழை அளவு 
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 
நீடாமங்கலம்-56, குடவாசல்-50, வலங்கைமான்-46, திருவாரூர்-42, திருத்துறைப்பூண்டி-32, பாண்டவையாறு தலைப்பு-30, மன்னார்குடி-24,  நன்னிலம்-16, முத்துப்பேட்டை-12.

Next Story