திருவாரூர் மாவட்டத்தில் 1,049 பள்ளிகள் திறப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நாளை(திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை 1,049 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நாளை(திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை 1,049 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூய்மை பணிகள் தீவிரம்
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்று குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நாளை(திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் பள்ளி அறைகள், வளாகங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டி குளோரின் பவுடர் மூலம் சுத்தம் செய்தும், கழிவறைகள் தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பள்ளி கல்வித்துறை முழு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
1,049 பள்ளிகள் திறப்பு
பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை கண்டறியும் பரிசோதனை, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து மாணவர்களும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் நர்சரி உள்ளிட்ட 1,049 பள்ளிகள் நாளை(திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story