திருச்செந்தூரில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு


திருச்செந்தூரில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 30 Oct 2021 10:51 PM IST (Updated: 30 Oct 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 28 தனியார் பள்ளிகளில் உள்ள 146 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி வாகனங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா தலைமையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது வாகனத்தின் முதலுதவி பெட்டி, தீயணைப்பான், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால கதவு, கேமராக்கள், இருக்கைகள், ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் ஆவணங்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதில் 118 தகுதியான வாகனங்களை மட்டும் நாளை முதல் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. குறைபாடுள்ள 28 வாகனங்களை சரிசெய்த பின்னர் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வின்போது, திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள், உதவி கல்வி ஆய்வாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story