உளுந்தூர்பேட்டை அருகே ரூ 50 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல்


உளுந்தூர்பேட்டை அருகே ரூ 50 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:00 PM IST (Updated: 30 Oct 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ரூ 50 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே கல்லமேடு கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்குள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சேந்தநாடு கிராமத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்த கடைக்கு பூட்டு போட்ட போலீசார் அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story