விபத்தில் வாலிபர் சாவு
ஓட்டப்பிடாரம் அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழசெய்தலை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் மாரிமுத்து (வயது 27). இவர் அரசடியில் மோட்டார் மெக்கானிக் ஒர்க்சாப் வைத்து இருந்தார். இவர் தனது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த சக்கையா மகன் அருண் (25), மாரிகண்ணன் மகன் அரசமுத்து (21) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கீழசெய்தலை கிராமத்தில் இருந்து மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மாரிமுத்து ஓட்டினார்.
சந்திரகிரி விலக்கு அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாரிமுத்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண், அரசமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அருண், அரசமுத்து ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story