அதிகபட்சமாக செய்யாறில் 71 மில்லி மீட்டர் மழை பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக செய்யாறில் 71 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக செய்யாறில் 71 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
செய்யாறில் 71 மில்லி மீட்டர் மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இதில், அதிகபட்சமாக செய்யாறில் 71 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேத்துப்பட்டு-64.2, வந்தவாசி-31, போளூர்-23.4, செங்கம்-22.6, ஆரணி மற்றும் கீழ்பென்னாத்தூர்-21, திருவண்ணாமலை-16, கலசபாக்கம்-14.4, தண்டராம்பட்டு-14, வெம்பாக்கம்-11, ஜமுனாமரத்தூர்-9.
அணைகளுக்கு தண்ணீர் வரத்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அணைகள் உள்ளன. இதில், 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 97.45 அடி நீர் உள்ளது.
அணைக்கு தற்போது வினாடிக்கு 820 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. அதே நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
59.04 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் 57.07 அடி நீர் உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. அதே நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டாநதி அணையில் 21.32 அடி நீர் உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 151 கன அடி நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. அதே நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
62.32 அடி உயரம் கொண்ட செண்பகதோப்பு அணையில் 53.73 அடி நீர் உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 18 கன அடி நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. வினாடிக்கு 37 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story