இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காரைக்குடி

 பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் அதன் மீதான நியாயமற்ற வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி காரைக்குடி பழைய பஸ் நிலையத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் பேரணியாக அண்ணா சிலை வரை நோக்கி வந்தனர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார்.
 ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், நகர ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன், கட்சியின் நகர செயலாளர் சீனிவாசன், மாநில குழு உறுப்பினர் சிவாஜி காந்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாத்தையா, கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன் மற்றும் காரைக்குடி, கல்லல், சாக்கோட்டை, தேவகோட்டை திருப்பத்தூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story