தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம்
புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
புதுக்கோட்டை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி புதிய ஆடைகள், பண்டிகை பொருட்கள் உள்ளிட்டவை வாங்க பொதுமக்கள் கூட்டம் கடைவீதிகளில் அலை மோதுகிறது. புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது பகல் 12.45 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரம் பெய்தது. இதனால் கடைவீதியில் கூட்டம் குறைந்தது. மழை நின்ற பின் மக்கள் கூட்டம் அதிகரித்தது. மேலும் இரு சக்கர வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சாலையோர வியாபாரிகள்
மழையின் காரணமாக சாலையோரம் கடை அமைத்திருந்த வியாபாரிகள் பாதிப்படைந்தனர். தார்ப்பாய் போட்டு கடையின் பொருட்களை மூடினர். மழை நின்ற பின் வியாபாரம் நடைபெற்றது. மழையால் குடை விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
Related Tags :
Next Story