விஷம் குடித்த தொழிலாளி சாவு
விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தார்
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 56). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 27-ந் தேதியன்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story