முகாமை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்


முகாமை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 31 Oct 2021 1:21 AM IST (Updated: 31 Oct 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாமை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அருப்புக்கோட்டை 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி 7-வது மெகா முகாம் நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக வந்தார். வரும் வழியில் அருப்புக்கோட்டை காந்திநகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை அவர் திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது விருதுநகர் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்து, பிற்பகல் 2 மணி அளவில் விமானத்தில் சென்னை புறப்பட்டார்.


Next Story